2026ம் ஆண்டுக்கான தனியார் பாதுகாப்புச் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான கேள்வி கோரல்

2026ம் ஆண்டுக்கான தனியார் பாதுகாப்புச் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான கேள்வி கோரல் பத்திரிகை விளம்பரமானது 21.11.2025ம் திகதிய தினக்குரல் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுளளது. இதற்கான பெறுகை ஆவணங்களை 2025.12.05ம் திகதி வரை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். கேள்வியானது 2025.12.06ம் திகதி மாலை முன்பதாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

தண்டம் அறவீடு: காலாவதியாக உணவுப்பொருட்களை விற்பனை செய்தமை, கழிவு நீரை முறையற்று வெளியேற்றியமை

பருத்தித்துறை நகரசபையினது ஆளுகைக்குட்பட்ட பகுதியில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனைக்கு வெளிக்காட்டிய பல்பொருள் வாணிபத்திற்கும் நுகர்வோரிற்கு பழுதடைந்த உணவினை விநியோகம் செய்த உணவக உரிமையாளரிற்கும் உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரினை வெளிச்சுற்றாடலிற்கு அப்புறப்படுத்திய உணவக உரிமையாளரிற்கும் எதிராக பருத்தித்துறை நகரசபையின் பொதுச் சுகாதார பரிசோதகரினால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது இன்றையதினம் (2025.10.17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பல்பொருள் வாணிபத்தினது முகாமையாளர் மற்றும் இரு உணவக உரிமையாளர்கள் தம்மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் 60,000/-,  10,000/-,  26,000/-  என மொத்தமாக 96,000/- தண்டப்பணம் கௌரவ மன்றினால் அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, பருத்தித்துறை முனை சிறுவர் மகிழ்வகம் திறந்து வைக்கப்பட்டது. 

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, பருத்தித்துறை முனை சிறுவர் மகிழ்வகம் (வெளிச்ச வீடு அருகில்) சிறார்களின் பயன்பாட்டுக்காக இன்று (01.10.2025) திறந்து வைக்கப்பட்டது.  “Dhanusha Marine” நிறுவனத்தினர் இம்மகிழ்வகத்திற்கான உபகரணங்களை புதிதாக வழங்கியிருந்ததுடன், ஒரு சில உபகரணங்களை புதுப்பித்து, மகிழ்வகத்தை சீரமைத்தும் வழங்கியிருந்தனர். இந்நிகழ்வில், கௌரவ தவிசாளர், செயலாளர், கௌரவ உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பொதுமக்கள், மற்றும் சிறார்களும் கலந்து கொண்டிருந்தனர். கௌரவ தவிசாளரின் அனுசரணையில், நிகழ்வில் கலந்து கொண்ட சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.