சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, பருத்தித்துறை முனை சிறுவர் மகிழ்வகம் (வெளிச்ச வீடு அருகில்) சிறார்களின் பயன்பாட்டுக்காக இன்று (01.10.2025) திறந்து வைக்கப்பட்டது. “Dhanusha Marine” நிறுவனத்தினர் இம்மகிழ்வகத்திற்கான உபகரணங்களை புதிதாக வழங்கியிருந்ததுடன், ஒரு சில உபகரணங்களை புதுப்பித்து, மகிழ்வகத்தை சீரமைத்தும் வழங்கியிருந்தனர். இந்நிகழ்வில், கௌரவ தவிசாளர், செயலாளர், கௌரவ உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பொதுமக்கள், மற்றும் சிறார்களும் கலந்து கொண்டிருந்தனர். கௌரவ தவிசாளரின் அனுசரணையில், நிகழ்வில் கலந்து கொண்ட சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


