பருத்தித்துறை நகரசபையினது ஆளுகைக்குட்பட்ட பகுதியில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனைக்கு வெளிக்காட்டிய பல்பொருள் வாணிபத்திற்கும் நுகர்வோரிற்கு பழுதடைந்த உணவினை விநியோகம் செய்த உணவக உரிமையாளரிற்கும் உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரினை வெளிச்சுற்றாடலிற்கு அப்புறப்படுத்திய உணவக உரிமையாளரிற்கும் எதிராக பருத்தித்துறை நகரசபையின் பொதுச் சுகாதார பரிசோதகரினால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது இன்றையதினம் (2025.10.17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பல்பொருள் வாணிபத்தினது முகாமையாளர் மற்றும் இரு உணவக உரிமையாளர்கள் தம்மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் 60,000/-, 10,000/-, 26,000/- என மொத்தமாக 96,000/- தண்டப்பணம் கௌரவ மன்றினால் அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
