திண்மக்கழிவகற்றல் கால அட்டவணை
பொதுமக்கள் கவனத்திற்கு !!!
பருத்தித்துறை நகரசபைக்குட்பட்ட J/401, J/402, J/403, J/404, J/405, J/407, J/409 ஆகிய கிராமசேவகர்பிரிவுகளில் எமது சபையால் நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைப்படி திண்மக்கழிவகற்றல் நடவடிக்கை மேற்கொள்ளவிருப்பதனால் தங்களது வீடுகளில் சேகரிக்கும் கழிவுப்பொருட்களை தரம் பிரித்து சேகரிப்பு பையில் சேகரித்து அவற்றிற்கென குறித்தொதுக்கப்பட்ட நாட்களில் இதற்கென வரும் சேகரிப்பு வாகனத்தில் சேகரிப்பதற்காக வீட்டுக்கு முன்பாக வீதி ஓரங்களில் வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தங்களது கழிவுகள் தரம்பிரித்து வைக்கப்படாத பட்சத்தில் குறித்த திண்மக்கழிவுகள் எம்மால் அகற்றப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.
1. உக்கும் தன்மையற்ற திண்மக்கழிவுகள் (பிளாஸ்ரிக் பொருட்கள், கண்ணாடிப்போத்தல்கள், றெஜிபோம் போன்றவை) ,
2. உக்குவதற்கு காலதாமதமாகும் கழிவுப்பொருட்கள் (சிரட்டைகள், கோம்பைகள், முகக்கவசங்கள், கடதாசிகள் மற்றும் கடதாசிமட்டைகள்
3.மேற்படி ஒவ்வொரு வகுதிக்குரிய கழிவுகளை தனித்தனி சேகரிக்கும் பைகளில் சேகரித்து வைக்கவும்
சேகரிக்கும் நாள் : செவ்வாய், வியாழன்
4.உக்கும் தன்மையுடைய திண்மக்கழிவுகள் (வாழைத்தண்டு மற்றும் வெட்டப்பட்ட மரத்தின் சிறு பகுதிகள் , சமையலறைக்கழிவுகள்)
சேகரிக்கும் நாள் : திங்கள், புதன் , வெள்ளி
இராணுவ முகாம், துறைமுகவீதி, மரக்கறிச்சந்தை, பஸ்நிலையம் தொடக்கம் மெத்தைக்கடைச்சந்தி, முதலாம் குறுக்குத்தெரு,மீன்சந்தை ஒழுங்கை, 2ம் குறுக்குத்தெரு, பேக்கரிச் சந்தி தொடக்கம் தபால் அலுவலகம் வரை, சந்தை மேற்கு ஒழுங்கை, நீதிமன்றம், பொலிஸ் நிலையம், ஹாட்லிக்கல்லூரி, மெதடிஸ் பெண்கள் பாடசாலை ஆகிய இடங்களுக்கு திங்கள் முதல் ஞாயிறு வரை தரம் பிரித்த நிலையிலுள்ள கழிவுகள் சேகரிக்கப்படும்.
